Asianet News TamilAsianet News Tamil

மோடி பதவி ஏற்புவிழாவை மிஸ் பண்ணிய முதலமைச்சர்கள் !! ஏன் தெரியுமா ?

தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவ் மற்றும் இன்று புதிதாக ஆந்திரா முதலமைச்சராக  பதவி ஏற்றுக் கொண்ட ஜெகன் மோகன் ஆகியோரின் சிறப்பு விமானம் டெல்லியில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் இருவரும் மோடி பதவி ஏற்பு விழாவை தவற விட்டனர்.

kcr and jegan miss the function
Author
Delhi, First Published May 30, 2019, 8:46 PM IST

ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேச முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார்.

இதன்பின் நடந்த மதிய விருந்தில் தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர் ராவ், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

kcr and jegan miss the function

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து 2வது முறையாக மோடி மீண்டும் பிரதமராகிறார்.  

இதற்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்று வருகிறது.  இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

kcr and jegan miss the function

இந்த விழாவில் கலந்து கொள்ள தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் முடிவு செய்தனர்.  இதற்காக விஜயவாடா நகரில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றில் டெல்லிக்கு ஒன்றாக செல்வது என இருவரும் திட்டமிட்டனர்.

இதன்படி, மதியம் 2.30 மணியளவில் அவர்கள் புறப்பட்டனர்.  ஆனால், வெளிநாட்டு தலைவர்கள் வருகையையொட்டி டெல்லி விமான நிலையத்தில் 3.30 மணிக்கு பின் சிறப்பு விமானம் இறங்க அனுமதி வழங்க முடியாது என முதலமைச்சர்  அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

kcr and jegan miss the function

இதனால் இருவரின்  விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.  அவர்கள் இருவரும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை தவற விட்டனர்.  இதையடுத்து சந்திரசேகர் ராவ் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நகருக்கு திரும்பி சென்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios