கே.சி.பழனிசாமி மனு நிராகரிப்பு.. இபிஎஸ் மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம்..!
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்ததெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழு கூடி அவரை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக தேர்வு செய்தனர். அவர் சிறைச் சென்றப்பின் அவரை கட்சியிலிருந்தும், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு அந்த பதவிக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்ததெடுக்கப்பட்டனர். இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிங்க;- சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்..!
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது. எனவே கே.சி .பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். அப்போது, கே.சி. பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து, தனக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. எனவே இந்த நீக்கம் செல்லாது என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் ஏதாவது மனு நிலுவையில் உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரர் தரப்பில், தமது நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதிமுக உட்கட்சி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உட்கட்சி தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி மனுத்தாக்கல் செய்ய அவருக்கு தகுதியில்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க;- 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட மோடி வெற்றி? எந்த மாவட்டம் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்.!