Asianet News TamilAsianet News Tamil

கட்டுக்கடங்காத காய்ச்சல், கைவிரித்த ஹாஸ்பிடல்! கவலையில் குடும்பத்தினர்...

kauvery hospital doctor secret discussion with Karunanidhi family
kauvery hospital doctor secret discussion with  Karunanidhi family
Author
First Published Jul 26, 2018, 11:11 PM IST


தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். டாக்டர்களின் தீவிர சிகிச்சையில் இருக்கும் அவருக்கு  தற்போது  கட்டுக்கடங்காத காய்ச்சல் உள்ளதால் டாக்டர்கள் குழு கைவிரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று மாலை காவிரி மருத்துவமனை டாக்டர்கள் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில், திமுக தலைவர்  கருணாநிதிக்கு சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  வயது முதிர்வு காரணமாக. சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றால் கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆன்டிபயோடிக்ஸ் மற்றும் திரவ மருந்துகள் செலுத்தபபடுகின்றன. 24 மணி நேரமும் டாக்டர்களின் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் கருணாநிதிக்கு  வீட்டிலேயே மருத்துவமனையில் உள்ள அளவுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு, யாரும் அவரை சந்திக்க வேண்டாம்   காவிரி மருத்துவமனை செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் செய்திக்குறிப்பில்  தெரிவித்திருந்தார்.

kauvery hospital doctor secret discussion with  Karunanidhi family

இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கிளிடம் பேசிய டாக்டர்கள்  சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட, அவருக்கு அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருப்பதாலும், காய்ச்சலுக்கான மருந்தை அவரது உடல் ஏற்க மறுப்பதாகவும்  இனி எதுவும் எங்களால் செய்ய முடியாது என டாக்டர்கள் குழு கைவிரித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் வெண்டிலேட்டரை எடுத்துவிட்டதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது

இதனையடுத்து  தகவல்  வெளியானதால்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க இன்று சென்னை கோபாலபுரத்திற்கு சென்றனர். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும் வந்ததாக சொல்லப்படுகிறது.

அதேபோல, திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பி.எஸ். ஞானதேசிகன் கோபாலபுரம் இல்லம் வந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். இவர்களைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்  தலைவர்களும் வருகை தருவதால் கோபாலபுரம் இல்லமே பரபரப்பாக காணப்படுகிறது. அப்பகுதியில் பெருமளவில் திமுகவினரும் கூடியுள்ளனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios