ஒரு ஜாலிக்காக, ஒரு ஜோக்கிற்காக நான் என் முகநூல் பதிவில் பதிவிட்டிருந்ததை சிலர் பிரச்சனையாக்கிவிட்டனர் என குமுறியுள்ளார் விளம்பர பிரியரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு.

சிறு வயதில் ஜெயலலிதா மிகவும் அழகாக இருப்பார். அதனால் அவரை ஒரு தலையாக நான் காதலித்தேன் என தெரிவித்திருந்தேன். ஆனால் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே இது தொடர்பாக பல சர்ச்சைகள் கிளம்பின.
பீகாரிகளை விட தமிழர்கள் மிகவும் அறிவாளிகள் என்றும், ஜோக்குகளை புரிந்துகொள்வார்கள் என்றும் நினைத்திருந்தேன் என்று கூறிய கட்ஜு, தமிழர்கள் பற்றி தாழ்த்தி கூறுகிறாரா அல்லது உயர்த்தி கூறுகிறாரா என்பதை முடிக்காமல் மழுப்பலாதக கருத்து தெரிவித்துள்ளார்.

பின்னர் சொல்ல வந்த கருத்தை முடிக்காமல் தடாலடியாக தான் கூறிய கருத்துக்களை வாபஸ் பெற்று கொள்கிறேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேளையில் காதல், அழகு என்ற வார்த்தைகளை கொண்டு அநாகரீக கருத்துக்களை கட்ஜு தெரிவித்திருந்தது பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

டெல்லியில் உள்ள பல தமிழ் பிரமுகர்களிடமிருந்து ஜெ குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கண்டனங்கள் எழுந்ததாக தெரிகிறது. இதையடுத்தே அவர் தனது கருத்துக்களை வாபஸ் பெற்று கொண்டுள்ளார்.
