சாய் பாபாவிடம் சரண்டரான கதிர் ஆனந்த்..! 

இந்தியாவே உற்று கவனித்து வந்த வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பிய தருணத்தில் மாபெரும் டர்னிங் பாய்ண்டானது திமுக வின் நூலிழை வெற்றி.

பகுத்தறிவு பாசறை.. பகுத்தறிவு பாசறை என கலைஞர் கருணாநிதி வாய் வழியாக சொல்லி வந்தாலும், திமுகவில் உள்ள பல முக்கிய புள்ளிகள் கடவுளைவணங்க கூடிய தீவிர பக்தர்கள் தான் என்பதை நம்மால் பல நேரங்களில் பார்க்க முடிகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஆற்காட்டார், துரைமுருகன், கே. என் நேரு என அனைவரும் கடவுள் பக்தி கொண்டவர்கள் தான். இதையெல்லாம் தாண்டி துரைமுருகன் மற்றும் ஜெகத்ரட்சகன் அதீத கடவுள் பக்தி கொண்டவர் என்பது கருணாநிதிக்கே தெரியும். 

கதிர் ஆனந்த் பற்றி சொல்ல வேண்டும் என்றால், வட மாநிலத்தவரை போல ஆள்காட்டி விரலில் சென்டிமென்டாக மோதிரத்தை அணிந்தும், நெற்றியில் எப்போதும் குங்குமத்தை வைத்துக்கொண்டும் வெளியில் செல்பவர் தான் கதிர்ஆனந்த்  

மறைந்த முதல் வர் ஜெயலலிதா வைத்திருந்த  லேன் க்ரூஸர் காரை போன்று 3 காரை வைத்துள்ளார் கதிர். இந்த கார்களில் சீரடி சாய்பாபா போட்டோ இல்லாமல் இருக்காது.

அந்த அளவுக்கு பக்திமயமாக இருப்பவர். அவ்வளவு ஏன், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் அருகே உள்ள நவபாபா கோவிலுக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று தவறாமல் அட்டெண்டன்ஸ் போட்டு விடுவாராம் கதிர் ஆனந்த்

 

தேர்தல் நேரத்தில் பண பட்டுவாடாவில் சிக்கி தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் 2 மாதங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றது வரை சாய் பாபாவை நம்பியே பல வேண்டுதலுடன் இருந்தாராம் கதிர். இந்த அனைத்து தகவலும் திமுகவின் நெருங்கிய வட்டாரங்கள் பேசிக்கொள்வதாக தகவல் கசிந்தது உள்ளது.