லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் சுட்டு கொல்லப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட வீடியோவை வெளியிட்ட செய்தியாளர் சுட்டு கொல்லப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த சில நாட்களுக்கு விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டத்தின் போது திடீரென புகுந்த கார் ஒன்று திடீரென அந்த கூட்டத்தில் புகுந்தது. இதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

கார் விவசாயிகள் மீது மோதும் திகில் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந் நிலையில் இந்த வீடியோவை பதிவு செய்த செய்தியாளர் ராமு காஷ்யப் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டு உள்ள நிலையில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கொல்லப்பட்ட காஷ்யப்புக்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர். வீடியோ வெளியிட்ட செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான தகவலால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேலும் பதற்றம் நீடித்து வருகிறது.