Asianet News TamilAsianet News Tamil

மோடியுடன் கைகோர்த்த ராகுல்...! காஷ்மீர் விவகாரத்தில் வாலாட்டாதே... பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை...!

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளும் இதில் தலையிட இடமில்லை என ராகுல்காந்தி பதிவு செய்துள்ளார்.அத்துடன் ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே முழு காரணம் எனவும் அவர் அதில் பதிவிட்டுள்ளார். அதாவது பாஜக காங்கிரஸ் எதிர்கட்சிகள் என்ற முறையில் ஒருவரையொருவர் மாறி மாறி விமர்சித்துக் கொண்டாலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது அனைவரும் ஒரணியில் நின்று எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அவரின் கருத்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உணர்த்துகிறது. 
 

kashmir is indian internal issue, and he says don't interfi and also warning to pakistan and america
Author
Delhi, First Published Aug 28, 2019, 2:17 PM IST

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை ராகுல்காந்தி, கடுமையாக விமர்சிக்கும் அதே வேலையில், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அதில் மூன்றாவது நாடுகள் யாரும் தலையிடக்கூடாது என்றும் பாகிஸ்தான் இதில் சதி செய்ய முடியாது என்றும் அவர் காட்டமாக கருத்து பதிவு செய்துள்ளார். அவரின் இக்கருத்து நாட்டின் பாதுகாப்பில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது என்றும், அவரின் கருத்து வரவேற்கதக்கது என்றும் பலரால் பாராட்டப்படுகிறது. kashmir is indian internal issue, and he says don't interfi and also warning to pakistan and america

சமீபத்தில், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன்,  காஷ்மீர், லடாக் என இரண்டாக பிரித்து அவைகளை யூனீயன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  பாராளுமன்றத்தில் அதை சட்டமாகவும் நிறைவேற்றியுள்ளது. பாஜகவின் இந்நடவடிக்கையை காங்கிரஸ் திமுக  உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக காஷ்மீர் மக்களுக்கு மத்திய பாஜக அரசு துரோகம் செய்து விட்டது,  காஷ்மீர் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.  அமித்ஷாவும் மோடியும் தங்கள் கட்சிக்குள்ள பெரும்பான்மை பலத்தால்  சர்வாதிகாரிகளைப்போல் செயல்படுகின்றனர் என்று ராகுல் கடுமையாக முழங்கி வந்தார். kashmir is indian internal issue, and he says don't interfi and also warning to pakistan and america 

இதற்கிடையே காஷ்மீர் நிலையை தன் எதிர்கட்சி சகாக்களுடன் பார்வையிடச்சென்று  அனுமதியின்று திரும்பி வந்தார் ராகுல். இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவை கடுமையாக கண்டித்தும் விமர்சித்தும் இந்தியாவிற்கு எதிரான சதிவலைகளையும் பின்னிவருகிறது. காஷ்மீர் விவகாரத்தை ஐநா மன்றம் வரை கொண்டு சென்று இந்தியாவின் மீது புகார் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா, போன்ற நாடுகளையும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி வற்புறுத்தி வருகிறது.  பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளும் இந்தியாவிடம் மத்தியஸ்தம் செய்ய முற்பட்டுகின்றன. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்கி இந்தியாவை சர்வதேச அரங்கில் அமாவானப்படுத்தும் முயற்ச்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. kashmir is indian internal issue, and he says don't interfi and also warning to pakistan and america

இந்த சூழ்நிலையில், நாட்டிற்குள் அரசியல் ரீதியாக என்னதான் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது கட்சி வேறுபாடுகள் களைந்து அரசுடன் இணைந்து நிற்க முடிவு செய்துள்ள ராகுல்,  மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்  கருத்து பதிவு செய்துள்ள அவர், காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளும் இதில் தலையிட இடமில்லை என ராகுல்காந்தி  பதிவு செய்துள்ளார்.அத்துடன் ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே முழு காரணம் எனவும் அவர் அதில் பதிவிட்டுள்ளார். அதாவது பாஜக காங்கிரஸ் எதிர்கட்சிகள் என்ற முறையில் ஒருவரையொருவர் மாறி மாறி விமர்சித்துக் கொண்டாலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது அனைவரும் ஒரணியில் நின்று எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அவரின் கருத்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உணர்த்துகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios