கறுப்பர் கூட்டம் திமுக மற்றும் அக்கட்சியின் ஐடி விங் மாநில செயலாளர் பி.டி.தியாகராஜனின் கைக்கூலி என்பதற்காக ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

முருகப்பெருமானை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி க்றுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியான வீடியோ ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது, கொச்சைப்படுத்தியது, ரணத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அக்கிரமத்தை செய்ததின் பின்னணியில் பகுத்தறிவு போர்வை போட்டு  திமுக போன்ற கட்சிகள் பின்னணியில் இருக்கலாம் எனக் கருதப்பட்டது.

ஆனால் இதுகுறித்து திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவ்வை வைத்து பட்டும் படாலும், இந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல என்கிற ரீதியில் ஓர் அறிக்கையை மட்டும் திமுக வெளியிட்டது. இதுகுறித்து மு.க.ஸ்டாலினோ, திமுக கூட்டணிக் கட்சிகளோ வாய்திறக்கவில்லை. மாறாக கள்ள மவுனம் சாதித்தன.

பெரியார் சிலை அவமதிப்புக்காக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, கனிமொழி ஆகியோர் பெரும்பான்மை கொண்ட இந்து மதத்தை பற்றி இழிவு படுத்தியபோது வாய் திறக்கவில்லை. இந்நிலையில், கறுப்பர் கூட்டத்தை பின்னனியில் இருந்து இயக்குவது திமுக- மற்றும் கூட்டணிக்கட்சிகள் செயல்படுகின்றன என்கிற வாதம் எழுந்தது. அந்த வாதம் இப்போது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. 

கறுப்பர்கூட்டத்தில் தாடியுடன் முருகப்பெருமானை இழிவுபடுத்திய சுரேந்திரன், தாடியை, மீசையை மழித்து விட்டு பாண்டிச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தாரல்லவா? அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வட்டமடிக்கின்றன.

 

கறுப்பர் கூட்டத்தின் காரியவாதி செந்தில்வாசன் முத்துச்சாமி திமுக மாநில ஐடி.விங் செயலாளர் பி.டி.தியாகராஜனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், திமுக கூட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் திமுக கொள்கைகள், அறிக்கைகள், திமுக ஆதரவு கருத்துக்கள் ஆகியவற்றை தனது சமூக வலைதள கணக்குகள் மூலம் பகிர்ந்து கொண்டவை வெளியாகி இருக்கின்றன.

ஆக மொத்தத்தில் கறுப்பர் கூட்டம் திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.