Asianet News TamilAsianet News Tamil

சாதிப்பெயரைச் சொல்லி ராமதாஸையும் திருமாவையும் மட்டும் தான் வளர்த்து விடுவிங்களா? நாங்க என்ன தக்காளி தொக்கா... அடங்காத கருணாஸ்..!

தன் வாயில் வாஸ்து சரியில்லை! என்பது கருணாஸுக்கு நன்றாகவே தெரியும். சிறை வரை தன்னை இழுத்துவிட்டது தன்னுடைய நாக்கு! என்பதை புரிந்தும் கூட இன்னும் தெளியாதவராய் இருக்கிறார், வாயை அடக்க மாட்டேங்கிறார்! என்கிறார்கள் கெக்கே பிக்கேன்னு பேசினாலும் கூட பரவாயில்லை, எக்குத்தப்பாக பேசி எதுலேயாவது சிக்கிக்குறார்! என்று காய்கிறார்கள். 

karunas tension
Author
Tamil Nadu, First Published Jan 10, 2019, 5:47 PM IST

தன் வாயில் வாஸ்து சரியில்லை! என்பது கருணாஸுக்கு நன்றாகவே தெரியும். சிறை வரை தன்னை இழுத்துவிட்டது தன்னுடைய நாக்கு! என்பதை புரிந்தும் கூட இன்னும் தெளியாதவராய் இருக்கிறார், வாயை அடக்க மாட்டேங்கிறார்! என்கிறார்கள் கெக்கே பிக்கேன்னு பேசினாலும் கூட பரவாயில்லை, எக்குத்தப்பாக பேசி எதுலேயாவது சிக்கிக்குறார்! என்று காய்கிறார்கள். 

எந்த முதல்வரை நோக்கி எகிடுதகிடாக பேசியதற்காக வழக்கில் சிக்கி, சிறை தொட்டு பின் மீண்டாரோ, அதே முதல்வர் பழனிசாமியை சமீபத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தார் கருணாஸ். இதன் மூலம் அவர் மீது அ.தி.மு.க.வினரின் நட்புப் பார்வை பதிய துவங்கியுள்ளது. அதன் பின்  இப்போது பேட்டி தட்டும் கருணாஸ்... “பொது மேடையில முதல்வரை தப்பா பேசிட்டேன்னு சொல்றாங்க. நான் மேடையில் பேசியதில் முன்னால் மற்றும் பின்னால் விஷயங்களை வெட்டி தள்ளிட்டு, நடுவில் பேசியதை மட்டும் எடிட் பண்ணி கோர்த்து விட்டுட்டாங்க. karunas tension

தேவர் குருபூஜைக்கு வந்த முதல்வரை வரவேற்கத்தான் நான் காத்திருந்தேன். ஆனால், நான் அவரை தாக்குவதற்காக ஆட்களோடு நிற்கிறேன்னு, உளவுத்துறை நோட் போட்டுடுச்சு. அதை முதல்வரும் நம்பிட்டார். சரி போலீஸ்தான் பொய் சொல்லுது, அண்ணனும் அதை நம்பலாமா? தலைவர் எம்.ஜி.ஆர். காலத்துல இருந்தே அ.தி.மு.க.வை முக்குலத்தோர் கட்சின்னுதான் சொல்லிட்டு இருக்கிறாங்க. புரட்சித் தலைவி அம்மா கூட ‘நான் பிறபபல் பாப்பாத்தி, ஆனால் குணத்தால் மறத்தி’ன்னு சொல்லியிருக்காங்களே. karunas tension

இப்போ அண்ணன் எடப்பாடியார் முதல்வராக இருக்கிறதாலே இந்த ஆட்சியை கவுண்டர் ஆட்சின்னு சொல்றாங்க. அந்த சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் கணிசமாக இருக்குறதும் காரணம். அ.தி.மு.க.வில் மட்டுமில்லை! தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸுன்னு எல்லா கட்சியிலும் என் சமுதாயத்துக்காரங்களான முக்குலத்தோர் நிறைய இருக்கிறாங்க. நான் அறிவாலயத்துக்கு போறப்ப அங்கே இருக்கும் முக்குலத்தோர் ‘இவன் நம்மாளுய்யா’ன்னு சொல்றாய்ங்க. இதனாலே எல்லாம் ஒட்டுமொத்த தேவர் சமுதாயத்துக்கான தலைவனாக என்னை நான் கருதலை (ஓ! இது வேற உண்டா?)

 karunas tension

வன்னியர்களை ராமதாஸும், தலித்துகளை திருமா வளவனும் எப்படி வளர்த்துவிடார்களோ அது போலவே என் சமூகத்தை நான் வளர்க்க விரும்புறேன், அவ்வளவுதான். இதுல நான் பண்றதை மட்டும் சிலர் தப்பா பேசுறது நியாயமில்லையே!” என்றிருக்கிறார். ஆக மொத்தத்துல லொடுக்கு, அடுக்கு அடுக்கா பிரச்னைகளை இழுக்குது.

Follow Us:
Download App:
  • android
  • ios