முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாஸ் அவர்களை நடிகர் சங்கத்திலிருந்து நீக்க வலியறுத்தி நாடார் சங்கத்தை சேர்ந்த ஹரி என்பவர் மனு கொடுத்து உள்ளார்.

சென்னையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தனது கட்சியின் ஆர்பாட்டத்தின் போது வன்னியர்கள், கவுண்டர்களை வம்பிழுத்த கருணாஸ் நாடார் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை.

ஆர்பாட்டத்தின் போது பேசிய கருணாஸ், தன் பெயரில் நிறைய சொத்துகள் இருப்பதாக கூறினார். ஆனால் சொத்து சேர்ப்பதில் தான் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்தார். சேர்க்கும் சொத்துகளை செலவு செய்வதில் தான் தனக்கு ஆர்வம் என்றும் அவர் கூறினார். தற்போது ஆர்பாட்டத்திற்கு கூட 10 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்தார்.

ஏன் இப்படி செலவு செய்கிறீர்கள் என்று பலரும் என்னை கேட்பார்கள், ஆனால் நான் அவர்களுக்கு எல்லாம் ஒன்றை தான் கூறிக் கொள்ளப்போகிறேன். நான் தற்போது எவ்வளவு பணம் சேர்த்தாலும், வீடு கட்டினாலும், நகை அணிந்தாலும் நான் செத்த பிறகு கருணாஸ் வைத்திருந்த வீடு, கருணாஸ் அணிந்துள்ள நகை என்று யாரும் செய்தி சொல்லப்போவதில்லை.

அனைவருமே லொடுக்கு பாண்டியாக நடித்தார், திண்டுக்கல் சாரதியாக நடித்தார் என்று தான் செய்தி வெளியிடுவார்கள்.