Karunas angry speech at sample assembly
நான் இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்றவன்தான் அதற்கு? தவறு என்கிற பட்சத்தில் மக்களால் வாக்களிக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற அடிப்படை உரிமையில் இங்கு பேச அனுமதி கோரினேன் என அறிவாலயத்தில் நடந்த மாதிரி சட்டசபை கூட்டத்தில் அனல் பறக்கப் பேசினார் கருணாஸ்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், கையாலாகாத அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள் பறிபோகும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் இன்று காலை நடந்தது. சபாநாயகராக சக்கரபாணி பொறுப்பேற்று மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார். இதில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ் எம்.எல்.ஏ பங்கேற்றார்.
அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள், பறிபோகும் ஜனநாயகம் என்ற பொருளில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பேசிய கருணாஸ், நேற்றைய சட்டமன்றத்தில், போராடக்கூடிய மக்களை துப்பாக்கி கொண்டு கூறி பார்த்து நடத்திய படுகொலையை நடத்தியது யார்? அதற்கு உத்தரவிட்டது யார்? என்பது தான் அனைவரின் கேள்வியும். ஆம்.. நான் இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்றவன்தான் அதற்கு? தவறு என்கிற பட்சத்தில் மக்களால் வாக்களிக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்கிற அடிப்படை உரிமையில் பேசுவதற்கு அனுமதி கோரினேன்.

