திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் அவரது பிறந்த நாளான ஜூலை 3 ஆம் தேதி நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

அப்போதைய காலகட்டத்தில் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை கண்ட திமுக தொண்டர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கருணாநிதி தொலைகாட்சி பார்ப்பது போல் புகைப்படம் ஒன்றை காவேரி மருத்துவர்கள் வெளியிட்டனர். இதை பார்த்த தொண்டர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

மேலும் கருணாநிதிக்கு முழுமையாக உடல்நிலை சரியாகததால் நிர்வாகிகளை பார்ப்பதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் தொண்டர்களை பார்க்காமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்பு இருந்த நிலையை விட உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீட்டில் இருப்பவர்களை பார்த்து சிரிக்கிறார். பேச முற்படுகிறார்.

ஜூலை 3 ஆம் தேதிக்குள் பேசும் நிலைக்கு வந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் அவரது பிறந்த நாளான ஜூலை 3 ஆம் தேதி நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தகவல் திமுக தொண்டர்கள் மத்தியில் படு குஷியை ஏற்படுத்தியுள்ளது.