திமுக தலைவர் கருணாநிதியின் பால்ய நண்பர் NS இளங்கோவன் தஞ்சையில் இன்று  காலமானார்!

நேற்று முன்தினம் காவிரி மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து இரண்டாவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  

வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றி இருந்த கருணாநிதியின் பாலிய நண்பர் NS இளங்கோவன் தஞ்சையில் இன்று காலமானார். இவருக்கு  வயது 97  திமுகவின் முதல் மாவட்ட செயலாளர், இவருக்கு  நாகப்பட்டினம் தான் சொந்த ஊர், அண்ணாவுக்கு நெருக்கமானவர். மனக்கசப்பு காரணமாக அதிமுகவிற்கு சென்று மீண்டும் திமுகவுக்கு வந்துள்ளார். தற்போது தஞ்சையில் வசித்து அவ்ந்தார். வசதி படைத்த குடும்பத்தைச்சேர்ந்த இவர், திமுக தலைவர் கருணாநிதியை வாடா போடா எனக் கூப்பிடும் அளவிற்கு நெருங்கிய நண்பர்.

இதேபோல , தீவிர நாத்திகவாதியான நன்னன், திராவிட இயக்கத்தில் தீவிர பற்று கொண்ட இவர், தன் பணி ஓய்வுக்குப் பின் திமுகவுடனும், அக்கட்சியின் தலைவர் கருணாநிதியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டு பணியாற்றினார்.  முதுபெரும் தமிழறிஞர் மா . நன்னன்  கடந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி  காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 94.

திமுக தலைவரின் பள்ளி நண்பர்களான மா.நன்னன் மற்றும் இளங்கோவன் வாடா போடா என பேசும் அளவிற்கு நண்பர்களான இவர்களில் கடந்த ஆண்டு மா.நன்னனும், இன்று என்.எஸ் இளங்கோவனும் மறைந்துள்ளனர்.