karunanidhi will not participate his birthday function says M.k.Stalin

திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா குறித்து சென்னைா அண்ணா அறிவாலயத்தில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்போது பேசிய அவர், ஜூன் மாதம் 3 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் கருணாநிதியின் 60 ஆண்டு கால வைர விழா நிகழ்ச்சி நடைபெறும் என்றார். 

இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார், புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று கூறினார். 

தற்போதைய நிலவரப்படி வைர விழா நிகழ்ச்சியில் கருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட ஸ்டாலின், மருத்துவர்கள் அனுமதி அளிக்கும்பட்சத்தில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தெரிவித்தார்.

சட்டப்பேரவையைக் கூட்டும் படி முறையாக தெரிவித்தும் மன்றத்தைக் கூட்டாமல் அரசு செயல்படுவதாகதத் தெரிவித்த அவர், சட்டமன்றம் கூட்டப்பட்டால் மெஜாரிட்டி பறிபோய்விடும் என்ற பயம் அதிமுகவுக்கு இருப்பதாகக் கூறினார்.