karunanidhi will not participate his birthday function says M.k.Stalin

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சியினருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, லாலு பிரசாத், மாயாவதி உள்பட பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்ட கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு, மீண்டும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், கட்சி தொண்டர்கள் யாரும், அவரை பார்க்க வேண்டாம். நோய் பாதிப்பு உள்ளதால், தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர் என திமுக தலைமை அறிவுறுத்தியது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில், அவர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவத்துள்ளார்.

உடல் உபாதைகள் காரணமாகவும், நீண்ட நேரம் அவர் மேடையில் அமருவதற்கும் டாக்டர்கள் அனுமதி அளிக்க வேண்டும். டாக்டர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே திமுக தலைவர் கருணாநிதி, வைர விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.