karunanidhi wil participate his grand sons marriage function
கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனுரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் வரும் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்கிறார்.
உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ளது தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சுவாசப் பிரச்னை காரணமாக அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் தனது கொள்ளுபேரனுடன் கருணாநிதி சிரித்து விளையாடும் வீடியோவும் திமுக சார்பில் வெளியிடப்பட்டது.

கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ம் தேதி முரசொலி பவள விழா கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.

இந்நிலையில், வரும் 1 ம் தேதி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரின் கொள்ளுபேரன் மனுரஞ்சித்தின் திருமண விழா நடக்க உள்ளது. இதில் கலந்து கொண்டு மணமக்களை கருணாநிதி வாழ்த்துகிறார்.

கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனுரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கடந்த ஜூலை 10 ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமண விழா வரும் 1 ஆம் தேதி நடக்கிறது. இதில் கருணாநிதி பங்கேற்க உள்ளார். ஓராண்டிற்கு பிறகு கருணாநிதி கலந்து கொள்ளும் திருமண விழா இதுவாகும்.
