Asianet News TamilAsianet News Tamil

இறந்த பிறகும் போராடி வெற்றி பெற்ற கருணாநிதி; ஆனந்த கண்ணீரில் ஸ்டாலின்!!!

பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையே திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திமுக தலைவர் கலைஞர் இறந்து 16 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் அடக்கம் செய்ய மெரினாவில் அனுமதி கிடைத்துள்ளது. இந்த செய்தியை அறிந்த ஸ்டாலின் கண்ணீர் மல்க தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

Karunanidhi who succeeded in fighting after death Stanin at the tears

பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையே திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திமுக தலைவர் கலைஞர் இறந்து 16 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் அடக்கம் செய்ய மெரினாவில் அனுமதி கிடைத்துள்ளது. இந்த செய்தியை அறிந்த ஸ்டாலின் கண்ணீர் மல்க தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் கனிமொழி, கலாநிதிமாறன், துரைமுருகன், ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் தொண்டர்களை நோக்கி கண்ணீர் சிந்தினர்.Karunanidhi who succeeded in fighting after death Stanin at the tears

உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல, இறந்தபிறகும் போராடி வெற்றி பெற்று தந்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என துரைமுருகன் கூறியுள்ளார். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து துரைமுருகன் உருக்கமாக தெரிவித்தார். இந்நிலையில் இந்த செய்தியை அறிந்த தொண்டர்கள் துக்கத்திலும் கூட கலைஞர் கருணாநிதி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios