மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்த இல்லம் திருக்குவளையில் உள்ளது. அந்த இல்லம் முத்துவேலர் அஞ்சுகம் அம்மையார் நினைவு நூலகமாக கருணாநிதி இருந்தபோதே மாற்றி அமைக்கப்பட்டது. மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணா நிதியின் முழுமையான வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் முக்கிய புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவருடைய பழைய நினைவுகளை கூறும் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள இந்த வீட்டை தி.மு.க.வினர் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  கடந்த 16-ம் தேதி கஜா புயல் தாக்கியதில், இந்த வீடும் தப்பவில்லை. கருணாநிதி பிறந்த இல்லத்தின் மீது அருகே இருந்த தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அதில் பெயர்ப் பலகையும், ஓடுகளும் உடைந்தன. கஜா சூறையாடியதில்  கருணாநிதியின் வீடு கடுமையான சேதம் ஏற்பட்டது.

 

சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்தைப் பார்த்த திமுக தொண்டர்கள் சோகத்தில் மூழ்கினர். தலைவர் மறைந்தாலும் அவர் பிறந்து வளர்ந்த இல்லம் சேதமானதால் அதை மீண்டும் பழைய நிலைக்கே மாற்றியமைக்க கோரிக்கை வைத்ததால் அந்த பகுதி திமுகவினர் சீரமைக்கும் முயற்சியில்  இறங்கியதாக சொல்லப்பட்டது. இதற்கு முன்னதாக விஷயம் அறிந்த கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தான் அந்த வீட்டை பராமரிக்க போவதாக கூறியுள்ளார் என்று செய்திகள் வெளீயானது. இந்நிலையில் அழகிரியே விரையில் இங்கு வந்து நேரில் பட்டு வீட்டை சரிசெய்யப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் இன்னும் அந்த வீடு  சரிசெய்யப்படாததால் திமுகவினர் சோகத்தில் உள்ளனர்.