கட்சியை 50 ஆண்டுகளாக கட்டுக்கோப்பாக காப்பாற்றிய கருணாநிதியை திமுகவினர் கண்டுகொள்வதே இல்லை என்கிற குற்றச்சாட்டை அக்கட்சியினரே முன் வைத்திகின்றனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகர் தி.மு.க., சார்பில் துண்டு பிரசுரங்கள் அடித்து வீடு வீடாக கொடுத்தார்கள்.  அந்த துண்டு சீட்டில் 'வீட்டை விட்டு வெளியே போனால் அபராதம். வீட்டிற்குள்ளே இருந்தால் அநியாய மின் கட்டணமா?’என ஆளுங்கட்சியை கண்டிக்கிற வாசகத்துடன், மு.க.ஸ்டாலின் படம் மட்டும் தான் இருந்துள்ளது. துண்டு பிரசுரங்களை பார்த்த, கட்சியின் மூத்த தொண்டர்கள் சிலர், 'கருணாநிதி படத்தை ஏன் போடவில்லை' எனக் கேட்டதற்கு 'அவர் படம் வேண்டாம் என மாவட்ட நிர்வாகிகள் உத்தரவு போட்டிருப்பதாக கூறி இருக்கிறார்கள். இதைக் கேட்டு, மூத்த தொண்டர்கள் மனம் வெதும்பி போயிருக்கிறார்கள். அதுதான் மூன்றாம் கலைஞர் இடம்பிக்க ஆரம்பித்து விட்டதே பிறகு ஏன் கவலை?