Asianet News TamilAsianet News Tamil

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் கேட்ட வழக்கு... தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்டக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Karunanidhi name in the case of the metro railway station
Author
Chennai, First Published Sep 15, 2020, 8:20 AM IST

சென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூட்டினார். ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்தை சென்னையில் கொண்டு வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சூட்டப்படாதது குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.Karunanidhi name in the case of the metro railway station
அந்த மனுவில், “ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்றும் சென்ட்ரல் நிலையத்துக்கு  ‘புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையம்’ என்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு  ‘புரட்சி தலைவி டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மெட்ரோ’ ரயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டன. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது. Karunanidhi name in the case of the metro railway station
சென்னையில் மெட்ரோ திட்டம் வர காரணமாக இருந்த கருணாநிதியின் முயற்சியை வரலாற்றிலிருந்து மறைக்கவும் அரசியல் நோக்கத்துடனும் மற்ற தலைவர்களின் பெயர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சூட்டப்படுகிறது. எனவே, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ‘டாக்டர். கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம்’ எனப் பெயரை சூட்ட வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.Karunanidhi name in the case of the metro railway station
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ‘முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்டவது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க முடியும்’ என்று தெரிவித்த நீதிமன்றம், இதுதொடர்பாக உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios