Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு நாள்... குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்திய அஞ்சா நெஞ்சன் அழகிரி..!

அஞ்சா நெஞ்சன் எனும் அடைமொழியுடன் மதுரையில் வலம் வந்தவர் தி.மு.க.வினரால் ‘அண்ணன்’ என்றும், எதிர்க்கட்சியினரால் ‘அ-னா’ என்றும் மரியாதை மற்றும் சங்கேத வார்த்தையால்தான் குறிப்பிடப் பட்டாரே தவிர, ஓப்பனாய் பெயர் சொல்லி அழைக்கப்பட்டதில்லை. எந்த கருணாநிதியால் வளர்த்துவிடப்பட்டாரோ அந்த அழகிரி, அதன் பின் அதே கருணாநிதியாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, தந்தம் பிடுங்கப்பட்ட ஆண் யானையாக்கப்பட்டு இதோ இன்று வரை அலைக்கழிக்கப்பட்டு வருகின்றார்.

Karunanidhi memorial... son mk alagiri pay tribute
Author
Tamil Nadu, First Published Aug 7, 2019, 2:27 PM IST

முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலுக்கு மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் கலைஞர் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தி.மு.க.வால் மதுரை வெடவெடத்தக் காலங்கள் என்று ஒன்று உண்டு. சத்யசாய் நகரில் இருந்து அழகிரியின் கார் கான்வாய் கிளம்புகிறதென்றால் ஒட்டுமொத்த சிட்டியும் போலீஸின் முழு கண்காணிப்பின் கீழ் வந்து நிற்கும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் சினிமாத்தனமான சீன்களால் திமிலோகப்படும் அந்த மண்.

 Karunanidhi memorial... son mk alagiri pay tribute

கழகத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தபோதும், மத்திய அமைச்சராக இருந்தபோதும் அழகிரியை அவ்வளவு எளிதில் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளாலேயே நெருங்கிவிட முடியாது. மன்னன், எஸ்ஸார் கோபி, பொட்டு சுரேஷ், கோபிநாதன், முபாரக் மந்திரி, அட்டாக் பாண்டி என்று மிரட்டலான வட்டங்களைத் தாண்டித் தாண்டிதான் அவரை நெருங்க முடியும். ஒரு நிமிடம், இரண்டு நிமிடங்களைத் தாண்டி அண்ணனின் பக்கம் நின்றுவிட முடியாது.

 Karunanidhi memorial... son mk alagiri pay tribute

அஞ்சா நெஞ்சன் எனும் அடைமொழியுடன் மதுரையில் வலம் வந்தவர் தி.மு.க.வினரால் ‘அண்ணன்’ என்றும், எதிர்க்கட்சியினரால் ‘அ-னா’ என்றும் மரியாதை மற்றும் சங்கேத வார்த்தையால்தான் குறிப்பிடப் பட்டாரே தவிர, ஓப்பனாய் பெயர் சொல்லி அழைக்கப்பட்டதில்லை. எந்த கருணாநிதியால் வளர்த்துவிடப்பட்டாரோ அந்த அழகிரி, அதன் பின் அதே கருணாநிதியாலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, தந்தம் பிடுங்கப்பட்ட ஆண் யானையாக்கப்பட்டு இதோ இன்று வரை அலைக்கழிக்கப்பட்டு வருகின்றார். கருணாநிதி மறைவுக்குப் பின் எழுந்து நிற்க முயன்றவரை, சில அதிகார மையங்களின் உதவியோடு அமுக்கி உட்கார வைத்துவிட்டார் ஸ்டாலின். Karunanidhi memorial... son mk alagiri pay tribute

இந்நிலையில், கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு தனது குடும்பத்தினருடன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios