தலைவரை நினைக்காத நொடியில்லை... 100-வது நாளில் நெகிழும் ஸ்டாலின்...!

திமுக முன்னாள் தலைவர் மறைந்து 100 நாட்கள் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

karunanidhi memorial

திமுக முன்னாள் தலைவர் மறைந்து 100 நாட்கள் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு திமுகவினர் உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. karunanidhi memorial
 
இந்நிலையில் கருணாநிதி உயிரிழந்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஆகையால் மெரினாவில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமையாக காட்சியளிக்கிறது.   karunanidhi memorial

மேலும், கருணாநிதி மற்றும் அவரது தாயார் அஞ்சுகம் அம்மாள் இணைந்திருப்பது போன்றும் அவரது சமாதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். இதையொட்டி திமுக நிர்வாகிகள் உள்பட பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர். karunanidhi memorial

இதனையடுத்து கருணாநிதி மறைந்து 100 நாட்கள் ஆன நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அதில், நொடிக்கு நூறு முறையாவது மறைந்த தலைவர் கருணாநிதியை நினைக்காமல் இருப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios