வயது முதிர்வினால் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியிடம் அவரது பேத்தி பாடல் பாடிக்காட்ட, அதை கேட்டு கருணாநிதி ரசித்து மகிழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது.

வயது முதிர்வின் காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி திமுக தலைவர் கருணாநிதி, அவரது கோபாலபுரம் வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார். எனினும் அவ்வப்போது அண்ணா அறிவாலயத்துக்கு சென்றுவருகிறார். மேலும் கருணாநிதியை அவரது வாரிசுகள் சந்திக்கும் வீடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.

அண்மையில் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியை சந்தித்த வீடியோ ஒன்று வெளியானது. பேரக்குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கருணாநிதியின் பேத்தியும், மு.க.தமிழரசுவின் மகளுமான பூங்குழலி கருணாநிதியை சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, கண்ணே கலைமானே பாடலை பூங்குழலி, கருணாநிதியிடம் பாடி காட்டுகிறார். அதை கேட்டு ரசித்த கருணாநிதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக புன்னகைத்தார். இந்த வீடியோ காட்சி திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.