Asianet News TamilAsianet News Tamil

யாரோ சொல்கிறார்கள் என்று நீங்கள் பேசுவது உங்களுக்கு அழகல்ல.. ஒரே வார்த்தையால் செல்லூர் ராஜூவை அடக்கிய ஸ்டாலின்

முதல்வர் இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் ஒரு முன்னாள் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையைக் குறைப்பதாக இருக்கிறது. 

Karunanidhi Library issue..CM Stalin give immidate reply to sellur raju
Author
Chennai, First Published Aug 25, 2021, 1:22 PM IST

மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை, என அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூவின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பென்னிகுயிக் நினைவிடத்தினை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கலைஞர் பெயரால் அமையவிருக்கக்கூடிய நூலகம் கட்டப்படவிருக்கிறது என்ற ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே இது சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் பேசப்பட்டிருக்கிறது, அப்பொழுதும் பொதுப் பணித் துறை அமைச்சர் மூலமாக விளக்கம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Karunanidhi Library issue..CM Stalin give immidate reply to sellur raju

 இப்போதும் சொல்கிறேன்; நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஒரு தவறான  பிரச்சாரத்தினைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அது சட்டமன்றத்திலும் பதிவாகக் கூடாது  என என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தினை நான் சொல்லியிருக்கிறேன். செல்லூர் ராஜு அதை இடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் என்று பொத்தாம் கருத்து தெரிவித்தபோது குறுக்கிட்டு முதல்வர் பதிலளித்தார். 

Karunanidhi Library issue..CM Stalin give immidate reply to sellur raju

மேலும், பேசிய முதல்வர் இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் ஒரு முன்னாள் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையைக் குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் என முதல்வர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios