Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி, ஜெயலலிதா தான் லாஸ்ட்.... இனி யாருக்கும் இல்லை!

தமிழகத்தில் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்துள்ளது. முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி மறைவையடுத்து இந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்தில் யாருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என காவல்துறை உயரதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karunanidhi,Jayalalitha Z plus security End
Author
Chennai, First Published Aug 12, 2018, 11:48 AM IST

தமிழகத்தில் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்துள்ளது. முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி மறைவையடுத்து இந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்தில் யாருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என காவல்துறை உயரதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Karunanidhi,Jayalalitha Z plus security End

பாதுகாப்பு தொடர்பாக முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது வழக்கம். அதில் இசட் பிளஸ், இசட், எக்ஸ், ஒய் ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், நீதிபதிகள், மத்திய அமைச்சர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், டெல்லி போலீசார் அல்லது இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். Karunanidhi,Jayalalitha Z plus security End

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதிக்கு மத்திய அரசின் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 2016-ல் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த இசட்பிளஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் பிளஸ் பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios