அதிமுகவை பொருத்தவரை திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே பிரதான எதிரி என டிடிவி தினகரன், செய்தியாளர்களிடம் கூறினார்.

அதிமுகவில் குடும்ப அரசியல் நுழைந்துள்ளது என திமுக மட்டுமல்ல அனைத்து கட்சியினரும் கூறி வருகின்றனர். ஆனால், எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா ஆட்சியிலும், இப்போதும், எப்போதும் அதுபோன்று நடக்காது. ஒன்றரை லட்சம் தொண்டர்கள் உள்ளனர்.

அதிமுக என்ற இயக்கம் தொண்டர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதில் யாரும் குடும்ப ஆட்சி நடத்த முடியாது. யாரும் நுழைய மாட்டார்கள்.

அதிமுக என்ற இயக்கத்தை அழிக்க பல கட்சிகள் செயல்படுகிறது. ஆனால், அந்த கட்சிகள் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்களுக்கு ஒரே ஒருவர் மட்டும்தான் எதிரி. எங்களுக்கு பிரதான எதிரி திமுக தலைவர் கருணாநிதி மட்டுமே.

இவ்வாறு அவர் கூறினார்.