எடப்பாடி பழனிசாமி கோட்டு சூட்டு அணிந்து இப்போது தான் கெத்து காட்டுகிறார். ஆனால் கருணாநிதி அந்தக் காலத்திலேயே கோட்டு சூட்டு அணிந்து கம்பீரமாக  வலம் வந்திருக்கிறார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று கோட்டு சூட்டில் வலம் வருவது தான் தற்போது தமிழகத்தில் ஹாட் டாபிக். சமூக வலைதளங்களில் இது தான் இப்போது பேசு பொருள் ஆகி வருகிறது. ஆனால், கருணாநிதி அந்தக் காலாத்திலேயே சுருள் முடி, கோட் சூட் என கம்பீரமாக வலம் வந்துள்ளார். அதுவும் அவர் வெளிநாடு செல்லும்போது அல்ல. தமிழகத்தில் இருக்கும்போது இந்த ஆடையில் தான் வலம் வந்தார்.  

பழைய போட்டோக்களை எல்லாம் பார்த்தால் சுருள்முடியுடன் கோட் சூட், சஃபாரியில் கெத்தாக இருப்பார் கருணாநிதி. ஆனால் நாளடைவில் மெல்ல மெல்ல தன் ஆடை அலங்காரத்தில் வேட்டி, சட்டைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். பட்டு துணியில் காலர் இல்லாத ஜிப்பா அணிந்தார். அதன்பின்னர் முழுவதுமாக காட்டனுக்கு மாறிவிட்டார். அதிலும் சட்டை வெண்ணிற ஆடைதான். வெள்ளை கலர் சட்டை நிரந்தரமானது. ஆனால் கறுப்பு-சிவப்பு கரை வைத்த துண்டுகளும், அவ்வப்போது வண்ண வண்ண சால்வைகளும் அவரது தோளில் வந்து ஒட்டிக் கொண்டு அலங்கரித்தன. நீண்ட காலம் வண்ணமய சால்வைகளையே கருணாநிதி அணிந்து வந்தார்.

 

ஆனால் இப்போது கருணாநிதி என்றால் மஞ்சள் துண்டுதான் வந்து நிற்கிறது. எதற்காக இந்த மஞ்சள் துண்டை போட்டுக் கொண்டார் என அவர் மறைந்த பிறகும் மர்மமாக இருக்கிறது. இந்த மஞ்சள் துண்டுதான் அவர் மண்ணுக்குள் போகும்வரை அவரது உடலில் ஒட்டியே கிடந்தது.