திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டது காவேரி மருத்துவமனை.

கடந்த 27 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். காவேரி மருத்துவமனை முன்பாக, எராளனமான  தொண்டர்கள் கூடி இருந்தனர். இந்நிலையில், இன்று மதியம் கலைஞரின் உடல் நிலையில்    மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு விட்டதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, கலைஞரின் வாரிசு மற்றும் உறவினர்கள் காவேரி மருத்துவமனை  விரைந்தனர். முதல் முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். அவரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடன் மு.க தமிழரசு, துரை தயாநிதி, அருள்நிதியும் விரைந்தனர்.

 தற்போது  திமுக செயல் தலைவர்  ஸ்டாலின், காவேரி மருத்துவமனை விரைந்தார். மேலும் சட்ட மன்ற உறுப்பினரும், உதயநிதி  ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் மருத்துவமனைக்கு  விரைந்துள்ளார்.இதற்கு முன்னதாக, இவ்வளவு அவசரம் காண்பிக்காத  உறவுகள் தற்போது காவேரி மருத்துவ மனைக்கு அவசர அவசரமாக விரைந்து வருகின்றனர் 

இதற்கிடையில் சற்று முன் வெளியான காவேரி மருத்துவமனை அறிக்கையில், கலைஞரின் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், தொடர்ந்து மறுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என  காவேரி   மருத்துவமனை கை விரித்து விட்டது  என்பது  குறிப்பிடத்தக்கது.