karunanidhi discharge from hospital
திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் செயற்கை உணவுக்குழாய் மாற்றும் சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து அவர் வீடு திரும்பினார்.
கருணாநிதி மருத்துவப் பரிசோதனைக்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.
உணவு இறங்குவதற்காக தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த குழாயை மாற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு செயற்கை உணவுக்குழாய் மாற்று சிகிச்சை முடிந்துவிட்டதாக மருத்துமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கருணாநிதியை கண்ட திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
