வன்னியர்களின் வளர்ச்சி கருணாநிதி போட்ட பிச்சை என திமுக  ஒன்றிய செயலாளர் குறிப்பிட்டதால் அந்த சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

வன்னியர் சமுதாயத்தில் இன்று படித்த இன்ஜினியர்கள் உள்ளது கருணாநிதி போட்ட பிச்சை என்று பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளரும், கே.என். நெருவின் மைதுனருமான கிருஷ்ணமூர்த்தி கூறியது வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்துவதாக இருப்பதாக வன்னியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

அதிமுகவை நிராகரிப்போம் கூட்டத்தில் பேசிய அவர், ‘’நமக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைத்தது என்றால் அதற்கு காரணம் கலைஞர். வேறி யார் முத்லமைச்சராக இருந்தாலும் கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் வன்னியர் சமுதாயம் மற்ற எந்த சமுதாயத்தைப்போலவும் விழிப்புணர்வுடன் இருந்தது கிடையாது. அவங்களுக்கு காடு உண்டு, வீடு உண்டு என்றிருந்த சமுதாயத்தில், இன்றைக்கு எஞ்சினியர்கள், டாக்டர்கள், வாத்தியார்கள் வந்திருக்கிறார்கள் என்றால் அது கலைஞர் போட்ட பிச்சையே தவிர வேறெதுவும் கிடையாது’’எனப்பேசினார். இது வன்னியர் சமுதாய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதி அரசியல் செய்யமாட்டோம், மதசார்பின்மையை கடைபிடிப்போம் என கூறும் திராவிட கட்சியான திமுக, களத்தில் இதுபோல தான் சாதி பெயர்களை கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.