அம்பேத்கார் மக்கள் இயக்கத்தை கருணாநிதி ஒழித்தார். வி.சி.கவை மு.க.ஸ்டாலின் ஒழிக்க நினைக்கிறார் என ரஜினி ஆதரவாளர்கள் திருமாவளவனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராம அவதாரங்களையும், கிருஷ்ண அவதாரங்களையும்,  இன்னும் பிற அவதாரங்களையும், கடுமையாக விமர்சித்தாரே தவிர, அவரே செருப்பால் அடித்தார் என்பது ஏற்புடையதல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். தயவு செய்து ரஜினிகாந்த் அவர்கள் வெறும் துக்ளக் ஆதாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு சவால் விடாமல், அந்த வெளியீடுகள் குறிப்பாக போராட்டங்கள் குறித்த பெரியாரின் பதிவுகள் வெளியாகி இருக்கின்றன. அவற்றையும் ரஜினி வாங்கி புரட்டிப்பார்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார் திருமாவளவன். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

இதற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ’’திருமாவளவன் முதலில் பெரியாரிஸ்டுகளை ஹிந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். திராவிட கழகத்தினரை இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள். 80 சதவீத இந்து மக்களின் உணர்வை கொச்சைப்படுத்திய இவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள். ரஜினிகாந்த் பெரியாரை எந்த இடத்திலும் தரைகுறைவாக பேசவில்லை.

திருமாவளவன் இந்துக்களை பற்றி குறை சொன்னாரே அவர் இந்து மக்களின் மன்னிப்பு கேட்டாரா முதலில் நீங்கள் சரியாக இருங்கள். ரஜினியை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் எனக்கூறும் உங்களை தான் யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள். இந்து மதத்தை வைத்து கேவலமான அரசியல் செய்யும் வீரமணி, கட்டுமரம் ஸ்டாலின், கமல்ஹாசன், திருமுருகன்காந்தி, திருமாவளவன், நக்கீரன் கோபால், அருள் மொழி, சுந்தரவல்லி ஆகியோர் விரைவில் அடங்கிப்போகும் காலம் வரும்.

 

ரஜினிக்கு திருமாவளவன் அறிவுரை சொல்ல வேண்டாம். நீங்கள் அறிவுடன் இருங்கள், சிதம்பரத்தில் நீங்கள் பானை சின்னம், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னம், இதுதான் அறிவின் வெளிச்சமா? அம்பேத்கார் மக்கள் இயக்கத்தை கருணாநிதி ஒழித்தார். வி.சி.கவை மு.க.ஸ்டாலின் ஒழிக்க நினைக்கிறார். அசிங்கமான பொம்மைகள் இருக்கும் தஞ்சாவூர் பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என நீங்கள் கூற என்ன யோக்கிதை இருக்கிறது. ரஜினி பெரியாரை பற்றி சொன்னதுக்கு குதிக்கிறீர்களே? ஏன் இந்து கோவிலை அசிங்கப்படுத்தின பேசியபோது நீங்கள் யோசிக்கவில்லையா திருமா?  என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.