Karnataka peoples give 5648 votes for Vattal Nagaraj

காவிரி விவகாரத்தில் எப்போதும் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழகத்துக்கு எதிராகவும், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதால் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் வெறும் 5648 வாக்குகளைப் பெற்று படுதோல்வியை பரிசாக கொடுத்துள்ளனர். 

கர்நாடகாவில் மே 12-ந் தேதி 222 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவில் 72.13% வாக்குகள் பதிவாகி இருந்தன. மாநிலம் முழுவதும் மொத்தம் 38 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் காலை தொடங்கி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. 

இந்நிலையில் கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை தூண்டிவிடும் இனவெரியனாக சொல்லப்படும் வாட்டாள் நாகராஜ் வெறும் 5648 வாக்குகளைப் பெற்று படுதோல்வியடைந்துள்ளார். 

கன்னட சலுவாளி கூட்டமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டார். 
அப்போது அந்த தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது தமிழில் பேசி வாக்கு சேகரித்தார் வாட்டாள். இந்நிலையில் அந்த தொகுதியில் படுகேவலமான தோல்வியை சந்தித்துள்ளார் அவர். வெறும் 5648 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார்.