karnataka people and media wants rajini as CM of tamil nadu

ரஜினி அரசிலுக்கு வருவதற்கு தமிழகத்தில் ஆதரவும், எதிர்ப்பும் ஒரு பக்கம் இருந்தாலும், அவர் தமிழக அரசியலில் தடம் பாதிக்க வேண்டும் என்பதில் கன்னட ஊடகங்களும், தலைவர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கர்நாடகாவை சேர்ந்த ஒருவர், தமிழ்நாட்டின் முதல்வராக வருவது, எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெருமை தெரியுமா? என்று கர்நாடக மக்கள் புளங்காகிதம் அடைந்து வருகின்றனர்.

கன்னட தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற செய்திகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.

ரஜினியின் சொந்த மாநிலம் கர்நாடகா என்றும், அவருக்கு தமிழகத்தில் உள்ள செல்வாக்கு பற்றி விளக்கும் செய்திகளுமே, பெரும்பாலான கன்னட ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. 

ரஜினி படித்த பள்ளி, அவரோடு பழகிய நண்பர்கள், அவர் வசித்த வீடு ஆகிவை பற்றியும், ரஜினியின் அருமை, பெருமைகளுமே, கன்னட ஊடகங்களில் தற்போது தலைப்பு செய்திகளாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தமிழ் திரையுலகில், சூப்பர் ஸ்டாராக இருப்பதும், அவர் தமிழக முதல்வராக வரும் நிலையில் இருப்பதும் எங்களுக்கெல்லாம் பெருமை என்றே கன்னட மக்கள் ஊடகங்களில் கூறி வருகின்றனர்.

ரஜினி மட்டும் தமிழக முதல்வர் ஆகிவிட்டால், தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே எந்த பிரச்சினையும் இருக்காது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். 

மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்பட, அம்மாநில அரசியல் புள்ளிகள் அனைவரும், ரஜினியுடன் நட்பை வலுப்படுத்தி கொள்ள விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

தற்போதுள்ள நிலையில், தமிழக அரசியலில் ரஜினி இறங்க வேண்டும் என்று, அவரது ரசிகர்கள் விரும்புவதைவிட, கர்நாடக மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பதே உண்மை