Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக தேர்தல் ரிசல்ட்... அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி...

karnataka election results The shock news by the American media New York Times
karnataka election results The shock news by the American media New York Times
Author
First Published May 15, 2018, 3:03 PM IST


கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே சொல்லப்பட்டு வந்த நிலையில் டுடேஸ் சாணக்கியா கருத்து கணிப்பு பிஜேபி 120 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறியிருந்தது.  பிஜேபி 106 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் WhatsApp பின் பங்கு கணிசமான அளவில் இருக்கும் அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

karnataka election results The shock news by the American media New York Timesகடந்த 12ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில், WhatsApp குழுக்களின் பங்கு கணிசமான அளவில் உள்ளது. இந்தியாவில் சுமார் 20 கோடி WhatsApp வாடிக்கையாளர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பிஜேபி, காங்கிரஸ் உட்பட முன்னணி கட்சிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் குழுக்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

karnataka election results The shock news by the American media New York Times

2014ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனமானது வாட்ஸ்அப்பைக் கையகப்படுத்தியது. அமெரிக்கத் தேர்தலில் வாக்காளர்களின் தகவல்களைத் திருடியதாக, சமீபத்தில் Facebook மீது குற்றம்சாட்டப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் மூலமாக இந்தத் தவறு நிகழ்ந்ததாக Facebook நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் ஒப்புக்கொண்ட நிலையில், இந்தியத் துணைக்கண்டத்தில் நிகழும் தேர்தல்களில் WhatsApp முக்கியப் பங்கு வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ். சமீப காலத்தில் மியான்மர், இலங்கையில் மக்களிடையே நடந்த மோதல்களிலும் Facebook வெளியிட்ட தவறான செய்திகளே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறான மற்றும் அரைகுறையான கருத்துகள், இரு கட்சிகளுக்கு இடையேயான தனிப்பட்ட மோதல், பகைமையை அதிகப்படுத்தும் கருத்துகள் அதிக அளவில் WhatsApp பில் பரப்பப்படுகின்றன. குழந்தை கடத்தல் பற்றிய தவறான தகவல்கள் WhatsAppபில் பரவியதால், கடந்த வாரம் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

karnataka election results The shock news by the American media New York Times

இந்தியாவில் இண்டர்நெட் பற்றிய அறியாத மக்கள், தங்களுக்குள் பேசிக்கொள்ளும் விஷயங்கள் பொதுவெளியில் வெளியாகின்றன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று டிஜிட்டல் உரிமைகள் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இதனைத் தடுக்க, பூம் என்ற உண்மை அறியும் இணையதளத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது facebook. இதன் மூலமாக, எதிர்காலத்தில் WhatsAppபில் வரும் தகவல்கள் சரிபார்க்கப்படும்.

இந்திய அரசியல் மறும் அரசு சார்ந்த தகவல்களைச் சரிபார்க்கும் வேலைகளை பூம் செய்துவருகிறது. கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, தவறான செய்திகள் வாட்ஸ்அப்பில் பரவாமல் தடுக்கும் வேலையை இந்நிறுவனம் செய்து முடித்துள்ளது. இதன் நிறுவனர் கோவிந்தராஜ் எத்திராஜ், ‘தவறான தகவல்களைப் பரப்பும் விஷயத்தில், நீங்கள் பேய்களோடு உறவாடுகிறீர்கள்’ என்று WhatsApp பற்றிக் குறிப்பிடுகிறார்.

karnataka election results The shock news by the American media New York Times

தொலைக்காட்சி, பத்திரிகை போன்றவற்றினால் புறக்கணிக்கப்படும்போது, தங்களது கருத்துகளை வெளியிட WhatsApp உதவிகரமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில நிர்வாகிகள். குறிப்பாக, அடிமட்ட அளவில் செயல்படுபவர்களிடம் இத்தகைய எண்ணம் உள்ளது. கர்நாடகத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ், பிஜேபி என இரு பெரிய கட்சிகளுமே WhatsApp குழுக்களைப் பெருமளவில் நம்பினார்.

அம்மாநிலத்தின் கடற்கரையோரத் தொகுதிகளில் வெற்றிபெற, WhatsApp குழுக்களையே பிஜேபியும் காங்கிரஸும் நம்பியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ். இன்று தேர்தல் முடிவுகளில் பாஜகவிற்கு வெற்றி பெற்ற போதிலும், இந்த வெற்றியில்  WhatsApp குழுக்களின் பங்கு கணிசமான அளவில் இருந்தது என என்பது உறுதியாக கருத்துக்களை வெளியிட்டுள்ளது .

Follow Us:
Download App:
  • android
  • ios