கர்நாடகாவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதனால் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இதனையடுத்து, முதல்வராக குமாரசாமி பதவியேற்றார்.
14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி நடத்திய பிறகு கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 23-ம் தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிதாக பாஜக ஆட்சி பொறுப்பேற்றார்.
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் அனைவரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்துள்ளார்.
சபாநாயகரின் இந்த தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 17 பேரும் மனு தாக்கல் செய்தனர். இதை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இடைத்தேர்தலை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவித்தது.
இந்நிலையில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு மீதான இறுதி விசாரணை அக்டோபர் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடந்தது. பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தீர்ப்பில் கர்நாடகவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தை அணுகிய விதத்தை ஊக்குவிக்க முடியாது. அவர்கள் முதலில், உயர்நீதிமன்றத்தை தான் அணுகியிருக்க வேண்டும் என கூறினர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 16, 2019, 12:03 PM IST