Asianet News TamilAsianet News Tamil

Breakingnews: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா... கண்ணீர் பேட்டி..!

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Karnataka Chief Minister Edyurappa resigns ... tearful interview ..!
Author
Bangalore, First Published Jul 26, 2021, 12:17 PM IST

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Karnataka Chief Minister Edyurappa resigns ... tearful interview ..!

 பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிகழ்ச்சியில் இதனை எடியூரப்பா அறிவித்தார்.  தனது ஆட்சிகாலம் முழுவதும் அக்னி பரீட்சையாக அமைந்து விட்டதாகவும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். பாஜக மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் ராஜினாம செய்யும் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். தமது ஆட்சியின் 2ம் ஆண்டு நிறைவுற்றதை அடுத்து புத்தகம் ஒன்றை வெளியிட்ட நிகழச்சியின் இதனை எடியூரப்பா அறிவித்தார்.

Karnataka Chief Minister Edyurappa resigns ... tearful interview ..!

கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறை முதல்வராக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜ.க.,வில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனாலும் 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்வர் பதவியை பா.ஜ.க., மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்ப்பா பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் ராஜினாமா செய்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios