சூடு பிடிக்கும் கர்நாடக தேர்தல்.! பசவராஜ் பொம்மை தோளில் அடித்து விளையாடிய சித்தராமையா- தொண்டர்கள் வியப்பு

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- பாஜக இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், விமானநிலையத்தில் திடீரென சந்தித்துக்கொண்ட பசவராஜ் பொம்மையும், சித்தராமையாவும் தோளில் அடித்து சிரித்து பேசிக்கொண்டது பாஜக,காங்கிரஸ் தொண்டர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Karnataka Chief Minister Basavaraj Bommai and Congress President Siddaramaiah met and congratulated each other in person

 கர்நாடக தேர்தல்- தீவிர பிரச்சாரம்

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் நீயா நானா என காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மல்லுக்கட்டி வருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடித்தால் ஆட்சி அதிகாரத்தை பிடித்துவிடலாம் என  இரு தரப்பும் தீவிரமாக பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறது. தென் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் இந்த மாநிலத்தை விட்டு விட பாஜக தயாராக இல்லை இதற்காக பிரதமர் மோடி பலமுறை கர்நாடக மாநிலத்திற்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார். அமித்ஷாவும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

 இதே போல் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் தீவிரமாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.  கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வேட்பாளர்களை களத்தில் இறக்கி உள்ளது. 

Karnataka Chief Minister Basavaraj Bommai and Congress President Siddaramaiah met and congratulated each other in person

மோதிக்கொள்ளும் காங்கிரஸ்- பாஜக

இரு தரப்பு  பிரச்சாரத்திற்கு இடையே கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளும் ஆதரவாக வந்து கொண்டுள்ளது. இருந்த போதும் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீவிரமாக பாஜக போராடி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் தேர்தல் ஆணையத்தில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகாரை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில்  சென்ற அண்ணாமலை பணத்தை கட்டு கட்டாக கொண்டு சென்றதாக  காங்கிரஸ் கட்சியை புகார் தெரிவித்து இருந்தது. மேலும் தனது பழைய போலீஸ் நண்பர்களை வைத்து பணம் பட்டுவாடா செய்யும் வேலையிலும் அண்ணாமலை ஈடுபடுவதாக குற்றச்சாட்டு கூறியிருந்தது.

தோளில் தட்டி விளையாடிய சித்தாரமையா

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக விமானத்தில் செல்வதற்காக பெலகாவி விமான நிலையம்  வந்த  கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும், முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தாராமையா விமான நிலையத்தில் திடீரென சந்தித்து பேசிக் கொண்டனர்.அப்போது தேர்தல் வெற்றிக்காக இருவரும் மாறி மாறி வாழ்த்து தெரிவித்தனர். தேர்தல் களத்தில் தான் விரோதி உள்ளே நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் அளவில்,  காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தாரமையா, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முதுகில் தட்டி சிரித்து பேசியது காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

அண்ணாமலைக்கு தடை விதியுங்கள்..! தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் தெரிவித்த காங்கிரஸ்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios