முக்குலத்தோர் புலிப்படை தலைவரான நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது  தினகரனுக்கு  ஆதரவாக  சில  கருத்துக்களை தெரிவித்தார். அதில் குறிப்பாக ஓ.பி.எஸ் அணிக்கு உரிய மரியாதை அளித்த பழனிசாமி  தினகரன் அணிக்கு உரிய மரியாதை வழங்க  வில்லை என குறை கூறினார்.

அதாவது, 10 எம்.எல்ஏக்களை வைத்திருந்த ஓ.பி.எஸ் அணிக்கு உரிய மரியாதை அளித்த பழனிசாமி, 22 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள தினகரன், சசிகலாவை நீக்க முடிவெடுப்பது தவறு என கூறினார்.மேலும்,கருத்து வேறுபாடுகளை மறந்து தினகரன் அணிக்கு உரிய முக்கியத்துவம் அளித்து இந்த அரசை முழுமையாக 5 ஆண்டுகள் நீட்டிக்க செய்ய வேண்டும் என  விருப்பம்  தெரிவித்தார் கருணாஸ்

தொடர்ந்து பேசிய  கருணாஸ், அதிமுகவிலிருந்து சசிகலா, தினகரனை நீக்கி கட்சி நடத்துவது என்பது ஒட்டு மொத்த அதிமுக தொண்டர்களின் கருத்துக்கு எதிரானது எனவும் கூறினார்