தமிழக முதலமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து விமர்சிக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று சென்னை மாநகர முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க ,அமெரிக்கா, லண்டன், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு 12 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே அதற்கான அறிவிப்பை வெளியிட்டு அவர் பயணம் மேற்கொண்டுள்ளர். இந்நிலையில் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை  திமுக தலைவர் முக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக முதல்வர் என்ன நோக்கத்திற்காக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார், அவர் அங்கு போய் யார்யாரை சந்திக்க உள்ளார். வெளிநாடு பயணம் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்றெல்லாம் கேள்வி எழுப்பிய முக.ஸ்டாலின், அரசு செலவில் வெளிநாடுகளை சுற்றிப்பார்க்க செல்கிறாரா என்றும் முதலமைச்சரை கடுமையாக சாடிவருகிறார். 

திமுக தலைவர் முக ஸ்டாலினின் இந்த விமர்சனத்தை தற்சமயம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள, காங்கிரஸ்  கட்சியின் முன்னாள் தென் சென்னை மாவட்ட செயலாளரும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான கராத்தே தியாகராஜன் கண்டித்துள்ளார், அது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், தமிழக முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சிக்க திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளார். முதலமைச்சரின் பயணம் முடிந்த பிறகு, அந்த பயணத்தில் எதுபோன்ற நன்மைகள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது என்பதை அறிந்த பிறகே விமர்சனம் செய்வது தான், ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு உரித்தான செயல்.  

அவர் வெளிநாட்டுக்கு போய் திரும்புவதற்குள் அவரின் பயணத்தை விமர்சிப்பது முக ஸ்டாலினுக்கு அழகு அல்ல என்றும் கராத்தே தியாக ராஜன் , முக.ஸ்டாலினை கடுமையக விமர்சித்துள்ளார். திமுக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள நிலையில்  அந்த கட்சியை சார்ந்த கராத்தே தியாராஜன் ஸ்டாலினை விமர்சித்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.