அவரது இந்த பேச்சுக்கு முதல்வர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கன்னூரில் நடந்த கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், கேரள அரசின் வக்பு வாரிய கொள்கையில் என்னுடைய ஏழைத் தந்தையின் பெயரை ஏன் இழுக்கிறீர்கள் என புரியவில்லை, நான் பள்ளியில் படிக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார்.
முதலமைச்சர் பினராயி விஜயன் மகளுக்கு நடந்தது திருமணமே அல்ல என முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் எளிமையானவர்.. அமைதியானவர்.. தெளிவாக செய்யக்கூடியவர் இதுதான் கேரள முதல்வர் பினராய் விஜயன் குறித்து ஊடகங்களில் உலா வரும் செய்திகள். எதையும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் அதே நேரத்தில் உறுதியாகவும் அணுகக் கூடியவர் அவர். கொண்ட கொள்கையில் கம்யூனிஸ்டுகளுக்கே உரிய உறுதித் தன்மையுடன் போராடக் கூடியவர் பினராய் விஜயன். அவரின் தலைமையில்தான் தொடர்ச்சியாக கேரளாவில் அடுத்தடுத்து இரண்டு முறை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது கம்யூனிஸ்ட் கட்சி.
சுதந்திரத்திற்குப் ஒரே கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி கைப்பற்றி இருப்பது இதுவே முதல் முறை. இதை தனது சாதுரியத்தால் சாத்தியமாக்கி இருப்பவர்தான் பினராயி விஜயன். கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்கள் எப்போது நீங்கள் முதல்வராக போகிறீர்கள் என எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் வினோதமானது.. இதுவரை யார் முதல்வர் என்பதை எங்கள் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை, எங்கள் மாநில குழு கூடி விவாதித்து முடிவு செய்து கட்சித் தலைமையின் ஒப்புதல் பெற்று பிறகு தான் எங்கள் கட்சியின் சார்பில் முதல்வர் யார் என்பது அளிக்கப்படும் என அசால்ட்டாக கூறினார். அந்த அளவிற்கு எதையும் நிதானத்துடனும், நேர்த்தியுடன் அனுக கூடியவர் பினராயி விஜயன். அவர் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் தான் அவரது மகள் விணாவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணித் தலைவரும் தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸ்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

முதல்வர் வீட்டு திருமணம் என்பதற்கான எந்த ஆரவாரங்களும், வீண் பாடோடபங்களும் இன்றி, கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டு அவரது இல்லத்திலேயே மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. அதில் குடும்ப உறுப்பினர்கள் சிலர். தொழில்துறை அமைச்சர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய வாலிபர் சங்க தலைவர் சஜீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மிக மிக எளிமையாக திருமணம் நடந்துமுடிந்தது. இந்நிலையில் பினராயி விஜயன் மகள் விணாவுக்கும், முகமது ரியாஸ்க்கும் நடந்தது திருமணமே இல்லை எனஙும் அது திருமணமாகவே செல்லாது என்றும் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அப்துர் ரகுமானி கருத்து கூறியுள்ளார். அவரது கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. வக்பு வாரியக் கூட்டத்தில் பேசிய அப்துர் ரகுமானி, வீணா முகமது ரியாஸ் இருவருக்கும் நடந்தது திருமணமே அல்ல இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் அகில இந்திய தலைவர் ரியாஸ் எனது பகுதியை சேர்ந்த மணமகன் ஆவார்.
பினராயி மகளுக்கு நடந்தது திருமணமா? விபச்சாரம்.. அதைச் சொல்லும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும் என்றார். மேலும் இது தொடர்பாக பேசியஅவர் பினராய் விஜயன் அவர்களின் தந்தை குறித்தும் அவதூறாக பேசினார். பினராயி விஜயன் அவர்களின் தந்தை ' கள் ' இறக்கும் தொழிலாளி, அவரின் மகனான பினராய் விஜயனுக்கு கேரளாவை யாரும் திருமண சீர் வரிசையாக வழங்கிவிடவில்லை என பேசியிருந்தார். அப்துர் ரஹ்மான் பேச்சு சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் இது குறித்து பரப்பனங்காடி சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அளித்த புகாரின் பேரில் அவதூறு கருத்து மற்றும் மத வெறுப்பை தூண்டும் பேச்சு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அப்துர்ரஹ்மான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவரது இந்த பேச்சுக்கு முதல்வர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கன்னூரில் நடந்த கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன், கேரள அரசின் வக்பு வாரிய கொள்கையில் என்னுடைய ஏழைத் தந்தையின் பெயரை ஏன் இழுக்கிறீர்கள் என புரியவில்லை, நான் பள்ளியில் படிக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார். அவரை அவமானப் படுத்துகிறார்கள். அவர் ' கள் ' இறக்கும் தொழிலாளியாக வேலை செய்தது குற்றமா.? ' கள் ' இறக்கும் தொழிலாளியின் மகன் என்று பெருமையாகவே அடிக்கடி நான் கூறியிருக்கிறேன். ' கள் ' இறக்கும் தொழிலாளியாக என் தந்தை வேலை செய்தது தவறான செயல் அல்ல, என் மகள் மற்றும் மருமகன் குறித்த அநாகரிகமாக பேசுகிறார்கள். அப்படிப் பேசுவதை நிறுத்த வேண்டும், முதலில் உங்கள் தாய் சகோதரியை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், ஆரோக்கியமான கலாச்சாரம் என்பது குடும்பத்திலிருந்து பிறக்க வேண்டும். இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் இதுபோன்று பேசுவதற்கு அவரது குடும்பத்தில் இருந்து கற்றுக் கொண்டாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
