பாஜக மத்திய அமைச்சர்களுடன் திமுக எம்.பியும், மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

 

உணவு துறை மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது இல்லத்தில் எம்.பிகளுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் நாள் என்பதால், சக எம்பிக்களை இந்த விருந்துக்கு அழைத்திருந்தார். இந்த விருந்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருடன் பாஜக நிர்வாகிகளும், திமுக எம்.பி கனிமொழியும் பங்கேற்றனர். விருந்தின் போது கனிமொழி கிர்ரன் கெர், அனுப்பிரியா படேல், ஸ்மிருதி இரானி என அனைத்து பெண் எம்பிக்களும் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்துக் கொண்டு நடனமாடினர். 

 

எம்பி என்ற பொறுப்பு, பதவிகளை அடைந்து உயர்ந்துவிட்டாலும், தொலைந்து போன பழைய மழலை நினைவுகள் அந்த எம்.பிகளிடம் வெளிப்பட்டது. இந்த வீடியோவை மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த சிலர், பாஜகவை திமுக பலமாக எதிர்த்து வருகிறது.

 இந்நிலையில் ஸ்டாலினின் தங்கை பாஜக அமைச்சர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார். இது ஆடு உறவு குட்டி பகை என்கிற போக்கில் இருக்கிறது. ஆனாலும், கனிமொழி நட்பு பாராட்டுவது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. ஸ்டாலின் மட்டுமே எதிரியை போல பாஜகவினரை சீண்டுகிறார் என கமெண்டுகள் பறக்கின்றன. இதனால், காங்கிரஸ் கட்சியினர் ஏதேனும் நினைத்து விடுவார்களோ என நினைத்து ஸ்டாலின் கடுகடுப்பாக இருக்கிறார்கள் எனக் கூறுகின்றனர் உடன் பிறப்புகள்.