Asianet News TamilAsianet News Tamil

பிரேமலதாவை சந்திக்க வீட்டிற்க்கே செல்லும் கனிமொழி!! வியாழக்கிழமை கூட்டணியை உறுதி செய்யும் தேமுதிக...

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. ஆனால், தேமுதிக மட்டும்  எந்த அணிக்குப் போகப் போகிறது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாபிக்.

Kanimozhi will meet Premalatha vijayakanth
Author
Chennai, First Published Feb 26, 2019, 8:09 PM IST

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. ஆனால், தேமுதிக மட்டும்  எந்த அணிக்குப் போகப் போகிறது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாபிக்.

Kanimozhi will meet Premalatha vijayakanth

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக விஜயகாந்த்தின் வீட்டிற்க்கே சென்று சந்தித்துவிட்டு வந்ததால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. இதனையடுத்து அதிமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தையில்  இழுபறி தொடர்ந்து நீடித்ததால் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு திமுக பக்கம் கவனம் செலுத்தியது தேமுதிக. இந்நிலையில், எப்படியாவது தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவர விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரது உடல் நலம் விசாரித்துவிட்டு பிரேமலதாவையும் சந்திக்க இருக்கிறாராம் கனிமொழி.

Kanimozhi will meet Premalatha vijayakanth

இதுபற்றி கனிமொழி தரப்பில் இருந்து பிரேமலதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட,  கனிமொழியை வரவேற்க ஆவலோடு காத்திருக்கிறாராம் பிரேமலதா. திமுக, தேமுதிகவுக்கு 5 சீட்டுகள் கொடுக்க உள்ளதாம். ஒத்துவரவில்லையென்றால் காங்கிரஸிடமிருந்து இரண்டு தொகுதிகளை வாங்கி கொடுக்கும் முடிவில் இருக்கிறதாம் திமுக. இந்த சமயத்தில்,  கனிமொழி- பிரேமலதா சந்திப்பு நடந்தால் அது தேமுதிகவை திமுக கூட்டணியில்  உறுதி செய்யப்படும் என சொல்கிறார்கள் தேமுதிகவினர்.

Kanimozhi will meet Premalatha vijayakanth

எனவே இன்று நவமி, நாளை அஷ்டமி முடிந்த பின் வியாழக்கிழமை கனிமொழி- பிரேமலதா சந்திப்பு நடக்கவுள்ளதாம். மேலும் சந்திப்பு முடிந்ததும் கூட்டணி அறிவிப்பும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios