திமுகவில் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி முன்னிறுத்தப்படுகிறார், கனிமொழியை ஏற்று கொள்ளும் மனநிலையில் ஸ்டாலின் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். 

கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ ;- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது விட இன்றைக்கும் திமுகவில் குடும்ப ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. அன்றைக்கு கருணாநிதி முதல்வர், மகன் ஸ்டாலின் துணை முதல்வர், பேரன் மத்திய அமைச்சர், கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் என வரிசையாகப் பதவிகளை பட்டா போட்டனர்.

இன்று அதையும் தாண்டி உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். அதிலும் அவர்களுக்குள் பதவிப் போட்டி. ஸ்டாலினுக்கு கனிமொழியை கண்டால் பயம். கனிமொழி ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. எனவேதான் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினை முன்னிலை படுத்துகிறார் ஸ்டாலின். இதை நாங்கள் சொன்னால் அரசியல் தான் இருக்கும். அந்தக் குடும்பத்தில் கருணாநிதியின் மூத்த மகனாக உள்ள மு.க.அழகிரி அந்த கருத்தை சொல்லி இருக்கிறார் என்றார்.