Asianet News TamilAsianet News Tamil

நாங்க ஒன்னும் ஹோமோ செபியன்ஸ், முனிவர்களின் பிள்ளைங்க இல்ல... அவையை அலறவிட்ட கனிமொழி!!

நாங்க ஹோமோ செபியன்ஸ், முனிவர்களின் பிள்ளைகள் அல்ல, உங்க சாத்திரப்படி சூத்திரர்கள் என்றார் திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

Kanimozhi speech at Parliament
Author
Delhi, First Published Jul 29, 2019, 12:25 PM IST

நாங்க ஹோமோ செபியன்ஸ், முனிவர்களின் பிள்ளைகள் அல்ல, உங்க சாத்திரப்படி சூத்திரர்கள் என்றார் திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் கொண்டுவரப் பட்ட தேசிய மனித உரிமை ஆணைய திருத்த மசோதாவின் மீதான விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி ஆற்றிய உரையில்; நான் முதலில் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். நான் முனிவர்கள் வழியில் வந்தவள் அல்ல. என் மூதாதையர்கள் முனிவர்கள் அல்ல. என் மூதாதையர்கள் ஹோமோ செபியன்ஸ் (மனிதர்களின் அறிவியல் பெயர்) என்கிற அறிவியல் வழி வந்தவர்கள். என் பெற்றோர் சூத்திரர்கள். கடவுளின் எந்தப்  பாகத்தில் இருந்தும் பிறந்தவர்கள் அல்ல  நாங்கள். ஏனென்றால் நாங்கள் சமுக நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் போராடுபவர்கள். தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம்.

மனித உரிமைகளில் முக்கியமானது நாட்டு மக்களிடையே அறிவியல் மனப்பான்மையைப் பாதுகாத்தல். அறிவியல் மனப்பான்மை பெற்றி ருந்தால்தான் மனித உரிமைகளை பாதுகாக்க முடியும்.  அறிவியல் மனப்பான்மை இல்லாமல்  மனித உரிமைகளைப் பாதுகாத்திட முடியாது. தேசிய மனித உரிமை ஆணையத்தில் யார் யாரை நியமிக்க வேண்டும் என்று அங்கீகாரம் தொடர் பான துணைக்குழு பரிந்துரைகள் மீறப்பட்டிருப் பதாகக் கருதுகிறேன்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழுத் தலைவர் உள்ளிட்டோரை மனித உரிமை  ஆணையத்தில் உறுப்பினர்களாக்க இந்த மசோதா முயல்கிறது. அதேநேரம் மேற்குறிப்பிட்ட பதவியிலுள்ளோர் இந்த அரசில் மட்டுமல்ல, எந்த அரசிலும் ஆளுங்கட்சியின் அரசியல் செல்வாக்கி னால் நியமிக்கப்படுபவர்கள் என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது. இத்தகையோர் உறுப் பினர்களாக நியமிக்கப்பட்டால் தேசிய மனித உரிமை ஆணையம் எப்படி சுயேச்சையாக இயங்க முடியும்?

இந்த அரசு என்ஜிஓக்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டிருந்தாலும் என்ஜிஓக்கள்தான் மனித உரிமைக் களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். தலித் உரிமைகளாகட்டும், சிறுபான்மை உரிமை களாகட்டும்,  பெண்களின் உரிமைகளாகட்டும் தொண்டு  நிறுவனங்களின் பங்கு மகத்தானது. எனவே, தேசிய மனித உரிமை ஆணையத்தில் தகுதியான தொண்டு நிறுவனங்களுக்கு உரிய பங்களிக்க வேண்டும்.

தலைமை நீதிபதி என்பதில் இருந்து எந்த நீதிபதியையும் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கலாம் என்ற மாறுதலையும் இந்த மசோதா முன்மொழிகிறது. இது இந்த தலைவர் பதவிக்கான ஆரோக்கியமற்ற போட் டியை உருவாக்கும். மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருப்பவரை மீண்டும் நியமிப்பது என்பது மனித உரிமையில் நம்பிக்கை யுள்ள அனைவருக்குமே மனித உரிமை ஆணையம் மீது சந்தேகத்தையே ஏற்படுத்தும். ஆக மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இரண்டாம் முறையாக நியமிக்கப்படுதல் என்பது அரசுடன் மனித உரிமை ஆணையம் சமரசம் செய்துகொள் வதையே எடுத்துக்காட்டுவதாக அமையும்.

தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரே ஒரு உறுப்பினரை கூடுதலாக சேர்ப்பதன் மூலம் மட்டுமே ஆணையம் விசாரிக்கும் வழக்குகளுக்கு தீர்வு காண முடியாது. ஒரு நாளைக்கு சுமார் 450 வழக்குகள் மனித உரிமை ஆணையத்தை நோக்கி வருகின்ற நிலையில், லட்சக்கணக்கான வழக்கு களுக்கு தீர்வு காண வேண்டிய நிலையில், ஒரே ஒரு உறுப்பினரை கூடுதலாக நியமிப்பதால் எந்தத் தீர்வும் தரப்போவதில்லை. மேலும், ஒரு பெண் உறுப்பினரையும் கூடுதலாக சேர்ப்பதாக மசோதா கூறுகிறது. தேசிய மனித உரிமை ஆணையத்தில் அய்ம்பது விழுக்காடு பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே மனித உரிமை ஆணையத்துக்குதான் அனைத்து அதிகாரங்களும் தரப்பட்டிருந்தன. ஆனால், இப்போதைய திருத்தத்தில், ஆணையத்தின் தலைவருக்குதான் அனைத்து அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. நாம் மனித உரிமை பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உலகத்தின் மதிப்பீட்டில் இந்தியா வேறு மாதிரி இருக்கிறது. உலக நாடுகளில் இந்தியா மனித உரிமைகளை மோசமாக மீறும் பட்டியலில் இந்தியா 28 ஆவது இடத்தில் இருக்கிறது. இது நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

நாட்டில் கஸ்டடி படுகொலைகள் இரு மடங்கு அதிகரித்துள்ளன. 2016- ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய அரசு இதுபற்றிய புள்ளிவிவரங்களை வசதியாக மூடி மறைக்கிறது. பிரச்சினைகளை மூடி மறைப்பதே தீர்வாகிவிடும் என்று இந்த அரசு கருதுகிறது.

சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் நாட்டில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி தினம் தினம் தகவல்கள் வருகின்றன. சிந்தனை யாளர்கள், எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் தங்கள் கருத்துகளைச் சொன்னதற்காக கைது செய்யப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். மேலும், மனித உரிமை ஆணையம் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்படும் மனித உரிமை மீறல் களை ஆய்வு செய்யவோ, விசாரிக்கவோ முடியாது என்ற நிலை இம்மசோதாவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இது முழுக்க முழுக்க அர்த்தமற்றது.

இந்த மனித உரிமை திருத்த மசோதா என்பது தேசியமனித உரிமை ஆணையத்தை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம் இருக்கிறது. எனவே, இந்த மசோதாவைத் திரும்பப்பெற்று மனித உரி மையை உண்மையிலேயே பாதுகாக்கும் வண்ணம் புதிய மசோதாவைத் தாக்கல் செய்ய சபாநாயகர் மூலம் அரசை நான் வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios