* ஆண்கள்தான் பெண்களுக்காக முடிவுகளை எடுக்கின்றனர். பெண்களிடம் கருத்துக்களை கேட்பதே இல்லை. இது நேர்மையானது அல்ல: கனிமொழி எம்.பி.  


(மேடம் எதையோ மனசுல வெச்சுக்கிட்டு பேசுறா மாதிரி இருக்குதே! அண்ணாத்த மேலே ஏதாச்சும் ஆதங்கம் இருந்துச்சுன்னா, அறிவாலயத்துலேயே கொட்டிப்போடலாமே!ன்னு ஊரு கேட்குதுங்ளே எம்.பி.)

*    கைவசம் படங்களே இல்லாத ராய் லட்சுமி, குளியலறையில் டூ பீஸில் உட்கார்ந்திருக்கும் தன் படமொன்றை இன்ஸ்டாகிராமில் போட்டு நான்கு மணி நேரத்தில் எழுபத்தேழாயிரம் லைக்ஸை அள்ளிவிட்டாராம்: செய்தி. 


(டூ பீஸுக்கே இம்பூட்டு லைக்ஸு குவியுதே! அப்படின்னா...ன்னு சொல்லி நீங்க ஏதாச்சும் ‘சிங்கிள்’ முடிவு எடுத்துடாதீங்க லட்சு! குளிரு கும்மியடிக்கிற நேரத்துல நீங்க வேற ஹீட்ட கெளப்பாதீங்க. அப்புறம், உங்க பாத்ரூம் ஜன்னலு இப்படியா பப்பரப்பான்னு தொறந்தே இருக்கும்? போட்டோ போட்டு பொளக்குதே!)

*    ராஜஸ்தானில், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கடன்கள் எந்த வங்கியில், எவ்வளவு இருந்தாலும் தள்ளுபடி செய்ய முடிவு! செய்தி


(க்கும்! செத்து சுண்ணாம்பு ஆன பிறகு கடனை தள்ளுபடி பண்ணி...! பி.ஜே.பி. ஆட்சியில செத்தவங்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில ‘காரியம்’ நடத்துறீங்க. ஓகே! ஓகே!)

*    தி.மு.க. தேர்தலை கண்டு அஞ்சவில்லை. தேர்தலுக்கு அஞ்சுவது அ.தி.மு.க.வும், அதில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளும்தான்!: வைகோ


(வெள்ளச்சாமி பாட ஆரம்பிச்சதும் கேட்டை இழுத்துப் பூட்டி தேர்தலையே நிறுத்திட்டாங்க. இனி கறுப்பு பெட்ஷீட்டை போர்த்திக்கிட்டு காட்டுக்குள்ளே போனான்னா, அடுத்த எலெக்‌ஷனுக்குதான் எண்டர் ஆவான் வெள்ளச்சாமி)

*    கஜா புயல் பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை. எனவே அவர்களிடம் ஓட்டு கேட்க செல்வது தவறான செயலாக இருக்கும்: அமைச்சர் ஜெயக்குமார். 


(திருவாரூர விடுங்க தல, தமிழக மக்கள் கூடத்தான் நிறைய விஷயங்களை விரும்பல. அதுக்காக அந்த விஷயங்களை ‘கலைச்சுட்டு’ மறுபடியும் புதுசா ஒண்ணை கொண்டு வரமுடியுமா? பார்த்து சூதானமா பேசுங்க, எங்களுக்கும் சூது தெரியும்ல)