Asianet News TamilAsianet News Tamil

எத்தனை கண்டங்களை தாங்குவார்கள் பெண்கள்... எடப்பாடிக்கு எதிராக பொங்கும் கனிமொழி..!

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

kanimozhi sleam edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Jun 15, 2019, 6:00 PM IST

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, "பொள்ளாச்சி போன்ற சம்பவமாக இருந்தாலும் தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பெண்கள் பாதுகாக்க கூடிய எந்தவொரு செயல்பாட்டையும் அரசு செய்யவில்லை. மத்திய, மாநில அரசுகள் திணிக்க வேண்டும் என்று நினைக்க கூடிய விசயங்களை தான் திணிக்கிறார்களே தவிர, மக்களை பாதுகாக்கவும் பெண்களை பாதுகாக்கவும் எந்தவித அக்கறையும் இல்லாத சூழ்நிலை உள்ளது. kanimozhi sleam edappadi palanisamy

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு சிந்திக்கவே இல்லை. எல்லா தரப்பு மக்களையும் பாதிக்க கூடிய வகையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆற்றில் ஊத்து எடுத்து மக்கள் மணிக்கணக்கில் காத்து இருந்து தண்ணீர் எடுக்கின்றனர். இதுபோன்ற சூழலில் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 kanimozhi sleam edappadi palanisamy

தி.மு.க ஆட்சியில் சென்னை மக்களுக்காக கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். ஆனால் இந்த அரசு அதை சிந்திக்காமல் தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்பதால் அதை செயல்படுத்தாமல் பராமரிக்காமல் விட்டதாலும் நீர்நிலைகள் சரியாக தூர் வாராமல் விட்டதால் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் நிரந்தர தீர்வு காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை" கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios