நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றனர். அப்போது பெரும்பாலும் 'தமிழ் வாழ்க' என்ற கோஷங்கள் அதிகம்முழங்கின. தமிழ் வாழ்க என்ற வார்த்தையை கேட்டதும்  கடுப்பான பிஜேபி எம்பிக்கள், வந்தே மாதரம் போல்கே, ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதாகி ஜே' பாரத் மாதாகி ஜே'  என முழக்கங்களை எழுப்பி கூச்சலிட்ட சத்தத்தால் சபை குலுங்கியது.

17ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பித்தது. இடைக்காலச் சபாநாயகராகப் பொறுப்பேற்றுக் கொண்ட வீரேந்திர குமார், முதலாவதாகப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நேற்று பாஜக அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். மக்களவைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 

முதலில் வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி  தொடங்கி  தொகுதி வாரியாக தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, செல்வம் என வரிசையாக தமிழிலேயே பதவியேற்றுக்கொண்டனர். தயாநிதி மாறன் பதவியேற்கையில் தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என்று கூறினார். கறுப்புச் சட்டை அணிந்துவந்திருந்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்  திராவிடம் வெல்க, கலைஞரின் புகழ் ஓங்குக என்று முழக்கம் எழுப்பினார். சிலர்  இறுதியாக தமிழ் வாழ்க என முழக்கங்கள் எழுப்பினர்.
 
இதில் திருமாவளவன் பதவியேற்கயில் வாழ்க அம்பேத்கர், பெரியார், வெல்க ஜனநாயம், சமத்துவம் என்று கூறினார். அப்போது ஆளுங்கட்சி தரப்பினர் வந்தே மாதரம் போல்கே என்று இந்தியில் முழக்கமிட்டனர். அப்போது அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது.  அதேபோல தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி தமிழில் பதவி பிரமாணம் ஏற்று இறுதியில் வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என குறிப்பிட்டார். அப்போது பாஜக எம்பிக்கள் ஜெய்ஸ்ரீராம் என கூச்சலிட்டனர்.  பாரத் மாதாகி ஜே' பாரத் மாதாகி ஜே'  என முழக்கங்களை எழுப்பி கூச்சலிட்டனர்.

இப்படி முதல் நாளிலேயே, பிஜேபி எம்பிக்கள் பிரஷரை எகிறவைத்த திமுக எம்பிக்கள் மீதமிருக்கும் நாட்களில் மொத்த கூட்டத்தையும் கதிகலங்க விடுவார்கள் என்பதற்கு இன்று நடந்த சம்பவமே சாட்சி.