சனி ஞாயிறு என்று கூட பார்க்காமல் ஓயாது ஓடும் கனிமொழி..! 

திங்கள் முதல் வெள்ளி வரை நாடாளுமன்றத்தில் மிகவும் பிசியாக மக்களுக்காக குரல் கொடுத்து வந்த கனிமொழி, வார விடுமுறை நாள் என்று கூட பாராமல் இன்றும் மக்கள் பணியில் ஓயாது  ஓடிக்கொண்டே இருக்கிறார். 

டெல்லியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய கனிமொழி, இன்று காலை தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பொது கலந்தாய்வு கூட்டத்தில் பேசினார்.

பின்னர் மாலையிலேயே அடுத்த பிளைட் பிடித்து மதுரையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை இயக்கத்தில் பேசி வருகிறார். 

மதுரை பழங்காநத்தத்தில் தேசிய கல்விக் கொள்கை வரைவிற்கு எதிரான பரப்பரையில், தேசிய கல்விக்கொள்கை வரைவு-2019 திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்கள் கூடுகை நிகழ்வில் கனிமொழி எம்.பி பங்கேற்று சிறப்புரை ஆற்றி வருகிறார்.