Asianet News TamilAsianet News Tamil

தமிழ் தெரியாதவர்கள் தமிழக அரசு வேலையில் சேர வழிவகுப்பதா..? தமிழக அரசுக்கு கனிமொழி குட்டு!

குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை தமிழக அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செய்துள்ளது. குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் அதிரடியாக மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது. மொழித்தாளுக்குப் பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

Kanimozhi on TNPSC orderabout Tamil subject remove from the exam
Author
CHENNAI, First Published Sep 27, 2019, 10:30 PM IST

தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்  தேர்வுகளில் தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.Kanimozhi on TNPSC orderabout Tamil subject remove from the exam
குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய பாடத்திட்டத்தில் சில மாற்றங்களை தமிழக அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செய்துள்ளது. குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் அதிரடியாக மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது. மொழித்தாளுக்குப் பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.  டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த அறிவிப்பு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்பு பறிபோகும் என்று எதிர்க்கட்சிகள் கண்டித்துவருகின்றன.Kanimozhi on TNPSC orderabout Tamil subject remove from the exam
இந்நிலையில் இந்த நடவடிக்கையைத் தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என  திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கருத்தை கனிமொழி தெரிவித்திருக்கிறா. அதில், “டி.என்.பி.எஸ்சி நடத்தும், குரூப் 2 தேர்வுகளிலிருந்து தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசுப் பணியில் சேரவே இது வழி வகுக்கும். தமிழக அரசு உடனடியாக இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.'' எனத்தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios