ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் கொதித்தெழுந்திருப்பதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். 

பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. 

உச்சநீதிமன்ற அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். 

ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்துகளை சொல்லி வரும் நிலையில், நாளை திமுக போராட்டக்களத்தில் குதிக்கவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த திமுக எம்பி கனிமொழி, மக்கள் கொதித்துப்போயுள்ளதாக கூறியுள்ளார். 

அவர் அளித்த பேட்டி:- “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகின்றன. ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மக்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். இதன் பிறகாவது ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.